Saturday, June 28, 2008

E.E. Cummings (2)

மனிதனாய் இருப்பதன் பரிமாணங்கள் (9)

சாவது நல்லது ஆனால் சாவு,
கண்ணே,
எனக்குப் பிடிக்காது சாவு
ஒருவேளை சாவு
நல்லதாயிருந்தால்,
ஏனெனில்
எப்போது நீ (யோசிப்பதை நிறுத்திவிட்டு)
அதை உணரத்தொடங்குகிறாயோ,
சாவு அற்புதமாகிறது
ஏன்? ஏனெ
னில் சாதல்
சரியான இயற்கை; சரியாக
அதை உயிர்ப்பில்
வைக்கும்போது (ஆனால்
சாவு நிச்சயமாக
அறிவியல்பூர்வமானது
செயற்கையானது
தீது
சட்டபூர்வமானது)
நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்
சாதலுக்காக
எல்லாம்வல்ல கடவுளே

(மன்னியுங்கள் எங்களை, வாழ்வே, மரணத்தின் பாவமே)

3 comments:

Anonymous said...

வணக்கம் பெருந்தேவி...

சில நாட்களுக்கு முன் உங்களின் தீயுறை தூக்கம் தொகுப்பை வாசித்த போது (வாசிக்க முயற்சிச்சுகொண்டிருந்த போது :) ), நினைத்தேன்... நீங்கள் மொழியை கையாளும் முறையில் e.e.cummingsன் சாயல் தெரிகின்றதென்று. மொழி இலக்கணத்தை மீறல், வார்த்தைகளை இடையில் உடைத்தல்ல் போன்ற மொழி விளையாட்டுகளை சொல்கிறேன். ஆனாலும் அவற்றை மீறி ஏதோ ஓர் ஈர்ப்பு இருந்தது அந்த கவிதைகளில். இன்று உங்களை இணையத்தில் தேடலாம் என்று வந்தேன். பார்த்தால், நீங்கள் ஒரு cummings கவிதையை மொழிபெயர்த்திருக்கின்றீர்கள். :) கம்மிங்ஸின் பாதிப்பு உங்களிடன் இருந்ததா?

இந்த மொழிபெயர்ப்பு மிக நன்றாக வந்திருக்கிறது. ”மொழிபெயர்த்து செய்தல்” நல்ல பதம்.

- சித்தார்த்.

Perundevi said...

சித்தார்த்,

தீயுறைத்தூக்கத்திலிருந்து (1998) என் மொழிநடை ரொம்பவே மாறிவிட்டது. ஆனால் கமிங்ஸ் பாதிப்பு என்னிடம் இருப்பதை நண்பர்-எழுத்தாளர் திலீப்குமாரும் என்னிடம் சொல்லியிருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்களில் கமிங்ஸ் முக்கியமானவர். இக்கடல், இச்சுவை வாசிக்கக் கிடைத்ததா உங்களுக்கு? கருத்துகளை அறிய ஆவல். மூன்றாவது தொகுப்பு இவ்வருடம் வெளிவருகிறது. (அப்புறம், கமிங்ஸ்-ன் நான்கு கவிதைகள் பதிவில் மொழிபெயர்த்து செய்யப்பட்டு இருப்பதாக என் நினைவு?) நன்றி.

Unknown said...

வணக்கம் பெருந்தேவி,

சில மாதங்களாக கவிதைகளின் பக்கமே வரவில்லை. உரைநடை மட்டுமே படிக்கும் மனநிலை. சென்ற வாரம் எதேச்சையாக உங்களின் தீயுறைத்தூக்கம் தொகுப்பை எடுத்தேன். இரண்டு வருடங்களாக அலமாரியில் கைபடாமல் இருக்கும் நூல் இது. எனக்கு இந்த கவிதைகள் புரியவில்லை என்றாலும் மீண்டும் மீண்டும் படிக்கச்செய்தன.

எண்ணே எண்ணா
எழுத்தே யெழுதா
மார்க்கத்து நீ
யடைய

எண் ணெண்ணி
எழு தெழுதி
அழிவேன்
எந்நாள்?

இந்த கவிதையும்

சென்றது கடலுள்
வந்தது திரும்ப
நிலமெலாம் உப்புக்காடு
மணலெலாம் மணிநெற்கூட்டம்

இந்த வரியும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. மந்திரம் போல. இக்கவிதைகளின் ஒலியும் ஈர்ப்பிற்கும் முக்கியமான காரணம் என்று தோன்றுகிறது. நிலமெலாம் உப்புக்காடு மிக நல்ல சொற்சேர்க்கை. hats off.

இந்த முறை இந்தியா செல்லும் போது இக்கடல் இச்சுவை வாங்கி படிக்க வேண்டும்.

கமிங்க்ஸ் கவிதைகளின் மொழிபெயர்ப்பை வாசித்தேன். நான் அவர் சும்மா இரைத்துச்சென்றிருக்கிறார் என்று நினைத்த சொற்களை தமிழில் வாசித்து விட்டு மீண்டும் ஆங்கிலத்தில் வாசித்தால் பொருள்புரிகிறது.

நன்றி.